தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி: ரோகித் சர்மா விலகல் ஏன்?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் விலகியிருப்பதாக பிசிசிஐ கூறியுள்ளது.

Update: 2021-12-14 03:01 GMT

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் விலகியிருப்பதாக பிசிசிஐ கூறியுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் டிசம்பர் 26ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய டெஸ்ட் அணியை விராட் கோலியும், ஒருநாள் அணியை ரோகித் சர்மாவும் வழி நடத்துகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. அதில் டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா துணை கேப்டனமாக நியமனம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளது, பயிற்சியின் போது ரோகித் சம்மாவுக்கு இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரியாங்க் பஞ்சல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

Source: Twiter

Image Courtesy: The Indian Express

Puthiyathalamurai

Tags:    

Similar News