இந்தியா, தென்னாப்பிரிக்கா போட்டி: ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாதது ஏன்?

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதாவது சிவப்பு பந்துகள் பயன்படுத்தும் டெஸ்ட் போட்டிகள் செஞ்சூரியன், கேப்டவுன், மற்றும் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற உள்ளது.

Update: 2021-12-21 03:07 GMT

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதாவது சிவப்பு பந்துகள் பயன்படுத்தும் டெஸ்ட் போட்டிகள் செஞ்சூரியன், கேப்டவுன், மற்றும் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற உள்ளது. இரண்டு அணிகள் மோதுகின்ற முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26ம் தேதி செஞ்சூரியனில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது கொரோனா பெருந்தொற்று மீண்டும் அச்சுறுத்தி வரும் நிலையில், கிரிக்கெட்டின் மிகவும் தீவிரமாக உள்ள ரசிகர்கள் மற்றும் விளையாட்டு பிரியர்களுக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கிறோம். தற்போது எங்கள் நாட்டில் 4வது அலை உருவாகும் என்பதால், இரண்டு கிரிக்கெட் சங்கங்களும் ஒரு கூட்டு முடிவை எடுத்துள்ளது. அதாவது போட்டிகளுக்காக டிக்கெட்டுகளை வழங்காமல் வீரர்களையும், இந்த சுற்றுப்பயணத்தையும் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தற்போது ஒமைக்ரான் வைரஸாக உருமாறியுள்ளதால் இந்த சுற்றுப்பயணத்தின்போது, எந்த விதிமீறல்களும் ஏற்படாமலும் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் சூப்பர் ஸ்போர்ட்ஸ் மற்றும் எஸ்.ஏ.பி.சி. தளங்களில் ஒளிபரப்பப்படும் என்பதனை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் நினைவூட்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: ESPNcricinfo

https://www.maalaimalar.com/news/sports/2021/12/20205039/3304362/South-Africa-vs-India-All-3-Tests-and-ODIs-to-be-played.vpf

Tags:    

Similar News