இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Update: 2021-01-13 13:54 GMT
இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இலங்கிலாந்து அணி ஐபிஎல் தொடருக்கு பின்னர் தென் ஆப்ரிக்கா நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

பின்னர் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் கொரோனா தொற்று காரணமாக நடைபெறாத நிலையில் அதன் பின்னர் இலங்கை அணிக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ளது. 

இலங்கை அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நாளை தொடங்க உள்ளது. இதற்காக இரு அணிக வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அணி கடந்த மாதம் தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இரண்டு டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி வென்றதால் இலங்கை அணி தொடரை இழந்தது.

இந்நிலையில் சொந்த மண்ணில் பலம் வாய்ந்த இலங்கிலாந்து அணியை வீழத்தி வேண்டிய கட்டயத்தில் இலங்கை அணி உள்ளது. டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
திமுத் கருணாரத்ன, குசல் ஜானித் பெரேரா, தினேஷ் சந்திமல், குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், ஓஷாடா பெர்னாண்டோ, நிரோஷன் டிக்வெல்லா, மினோட் பானுகா, லஹிரு திரிமன்னே, லசித் எம்புல்டேனியா, வாணிந்து ஹசரங்கா, தில்ருவன் பெரேமர ஷானகா, அசிதா பெர்னாண்டோ, ரோஷென் சில்வா, லக்ஷன் சந்தகன், நுவான் பிரதீப் மற்றும் ரமேஷ் மெண்டிஸ்.

Similar News