இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேத்திவுஸ், டிக்குவெள்ளவின் ஆட்டத்தால் வலுவான நிலையில் இலங்கை அணி.!
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேத்திவுஸ், டிக்குவெள்ளவின் ஆட்டத்தால் வலுவான நிலையில் இலங்கை அணி.!
இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி அதே கலே மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களம் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா 6 ரன்னில் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய ஓசா பெர்னான்டோ டக்அவுட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய மேத்திவுஸ் திரிமானே உடண் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த திரிமானே 43 ரன்னில் வெளியேற நிலைத்து விளையாடிய மேத்திவுஸ் சதம் வீளாசினார். அடுத்து வந்த சண்டிமல் அரைசதம் விளாச டிக்குவெள்ள சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இலங்கை அணி 300 ரன்கள் மேல் கொண்டு சென்றார்.
சண்டிமல் 52 ரன்னிலும் டிக்குவெள்ள 92 ரன்னிலும் அவுட் ஆக பின்னர் திஸ்வான் பெரேரா கடைசி வரை போராடி அரைசதம் விளாச இலங்கை அணி 360+ ரன்கள் சேர்த்தது. முதல் டெஸ்ட் போட்டியில் 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு போராடுகின்றது.