தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இலங்கை அணி!

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இலங்கை அணி!

Update: 2020-12-27 12:23 GMT

இலங்கை அணி தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் செஞ்சுரின் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கருணராத்னே மற்றும் குசல் பெரேரா இருவரும் களம் இறங்கினர்.

கருனாரத்னே 22 ரன்னில் அவுட் ஆக குசல் பெரேரா 16 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த குசல் மென்டிஸ் 12 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க இலங்கை அணி 54-3 விக்கெட்களை இழந்து தடுமாறிது. பின்னர் ஜோடி சேர்ந்த சன்டிமல் மற்றும் தனஜெயா டி சில்வா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரும் அரைசதம் விளாச தனஜேயா டி சில்வா 79 ரன்னில் காயம் ஏற்பட்டு ரெபிட்அவுட் ஆனார்.

சன்டிமல் 85 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த டிக்குவெல்லா 43 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அதை தொடர்ந்து பின்னர் களம் இறங்கிய சனகா 25 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார். இலங்கை அணி 54-3 என்ற நிலையில் இருந்து 340-6 என்ற நிலைக்கு முன்னேறியது.  இதற்கு தனஜெயா மற்றும் சன்டிமல் பாட்னர்ஷிப் முக்கிய காரணம் ஆகும். 

Similar News