தென் ஆப்ரிக்கா செல்லும் இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு.!

தென் ஆப்ரிக்கா செல்லும் இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு.!

Update: 2020-12-18 09:00 GMT

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்கனவே சுற்றுபயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி கடைசி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை கொரோனா பாதிப்பு காரணமாக தடைசெய்யப்பட்ட நிலையில் இலங்கை அணி தற்பொழுது சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளது. 


இந்நிலையில் இந்த தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. அனைத்து அணிகளும் தற்பொழுது டெஸ்ட் சாம்பியன் தொடரை எதிர்பார்த்து டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் தான் இலங்கை அணியும் தென் ஆப்ரிக்கா சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் இலங்கை அணி நீர்வாகம் தற்பொழுது லங்கா பிரிமியர் லீக் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில் இந்ந தொடருக்கான இலங்கை அணியை அறிவித்துள்ளது. 


இலங்கை அணியில் மீண்டும் ஆஞ்சிலோ மேத்வுஸ் இணைந்துள்ளார். கேப்டன் திமுல் கருணாரத்ன தலைமையினா அணியில் திமுத் கருணாரத்ன (இ), குசல் ஜானித் பெரேரா, தினேஷ் சந்திமல், குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், ஓஷாதா பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, மினோட் பானுகா, லஹிரு திரிமன்னே, லாசித் எம்புல்டேனியா, சுருமுல்ரா ஹா, விஸ்வா பெர்னாண்டோ, கசுன் ராஜிதா, துஷ்மந்தா சமீரா, தசுன் ஷானகா, சந்தூஷ் குணதிலகே, அசிதா பெர்னாண்டோ, தில்ஷன் மடுஷங்க

Similar News