இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்ரிக்காவிடம் தடுமாறும் இலங்கை அணி!

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்ரிக்காவிடம் தடுமாறும் இலங்கை அணி!

Update: 2021-01-05 15:26 GMT

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட்  போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜோஜன்போர்க் மைதானத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொதப்ப இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. அனைத்து விக்கெட்களையும் இழந்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்கள் மட்டும் அடிக்க பின்னர் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர்களே அதிரடி காட்ட மீரண்டது இலங்கை அணி.

தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர் எல்கர் சதம் வீளாச பின்னர் வந்த டுஸ்ஷன் அரைசதம் வீளாச முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்கா அணி 302 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென் ஆப்ரிக்கா அணி இலங்கை அணியைவிட 145 ரன்கள் அதிகம் வைத்து இலங்கை அணியை இரண்டாவது இன்னிங்ஸை தொடக்க வைக்க இலங்கை அணி கேப்டன் கருரத்னே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி சதம் வீளாசினார். இலங்கை அணி தென் ஆப்ரிக்கா அணிக்கு பெரிய இலக்கை நீர்ணயிக்க போராடி வருகின்றது. 

Similar News