ஆஸ்திரேலியா அணி பவுலர்களை வெளுத்து வாங்கிய சுந்தர் - தாகூர் ஜோடி!

ஆஸ்திரேலியா அணி பவுலர்களை வெளுத்து வாங்கிய சுந்தர் - தாகூர் ஜோடி!

Update: 2021-01-17 13:27 GMT
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பென் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் லபுசானே சதம் வீளாச கேப்டன் பெயின் அரைசதம் வீளாச ஆஸ்திரேலியா அணி 369 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் நடராஜன் மற்றும் சந்தர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் விளையாடிய இந்திய அணியில் சுக்மன் கில் வந்த வேகத்தில் வெளியேற பெரிதும் நம்பி இருந்து ரோஹித் சர்மா 44 ரன்களில் வெளியேறினார்.

அதன் பின்னர் கேப்டன் ரஹானே மற்றும் புஜாரா நிலைத்து விளையாடுவார்கள் என நினைத்த நிலையில்  புஜாரா 25 ரன்களிலும் ரஹானே 37 ரன்களிலும் அடுத்து வந்த மயாங்க் அகர்வால் 38 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் சர்தூல் தாகூர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இந்திய அணியை தொய்வில் இருந்து மீட்டனர்.

அதை தொடர்ந்து இருவரும் அரைசதம் வீளாச இந்திய அணி 300 ரன்களை கடந்தது. தாகூர் 67 ரன்னில் வெளியேற சுந்தர் 62 ரன்னில் வெளியேற அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.  அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 336 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலியா அணி 33 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Similar News