சையது முஷ்டாக் அலி டி-20 தொடரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி!

சையது முஷ்டாக் அலி டி-20 தொடரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி!

Update: 2021-01-29 18:15 GMT

உள்ளூர் டி.20 தொடரான சையத் முஸ்தாக் அலி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவில் தமிழ்நாடு, ராஜஸ்தான், பரோடா மற்றும் பஞ்சாப் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.இதில் முதலாவது அரையிறுதி போட்டியான இன்றைய போட்டியில் தமிழக அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக மொனாரியா 51 ரன்களும், குப்தா 45 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சில் தமிழக வீரர் எம். முகமது 4 விக்கெட் வீழ்த்தினார், அதே போல் சாய் கிஷோர் 2 விக்கெட்கை கைப்பற்றினார்.இதனையடுத்து 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணியின் ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹரி நிஷாந்த் 4 ரன்னிலும், என். ஜெகதீசன் 28 ரன்னிலும் வெளியேறினர்.

அடுத்து வந்த பாபா அபரஜித் 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.இதன்பின் நான்காவது வீரராக களம் இறங்கிய அருண் கார்த்திக் அபாரமாக விளையாடினார். அவர் ஆட்டமிழக்காமல் 54 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்கள் விளாச தமிழ்நாடு அணி 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 17 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Similar News