T20 உலக கோப்பை தொடர் இந்திய அணி: லோகேஷ் ராகுலை நீக்க மாட்டோம்!
உலகக்கோப்பை தொடர் இந்திய அணியில் லோகேஷ் ராகுலை நீக்க மாட்டோம்.
T20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 8 பந்துகள் 4 ரன்களும், நெதர்லாந்து எதிரான ஆட்டத்தில் 12 பந்துகளில் ஒன்பது ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் அவர் ஆடும் லெவல் அணியில் இருந்து நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்படுவாரா? என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் இடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு பதில் அளிக்கையில் லோகேஷ் ராகுலை நாங்கள் நீக்க மாட்டோம்.
அது குறித்து நாங்கள் சிந்திக்கவே இல்லை. இரண்டு ஆட்டங்களில் மோசமாக அடியதற்காக ஒருவரை நீக்குவது சரியானதாக இருக்காது. லோகேஷ் ராகுல் நன்றாக பேட்டிங் செய்கிறார். பயிற்சியின் போது நன்றாக செயல்பட்டார். இதனால் நாங்கள் எந்த மாற்றமும் செய்ய மாட்டோம். திருஷ்டவசமாக 11 பேர் மட்டுமே விளையாட முடியும். ரிஷப் பண்டும் அருமையான வீரர் என்பது எங்களுக்கு தெரியும். எந்த ஒரு அணியும் எதிராக அவரால் அதிரடியாக விளையாட முடியும் என்பதும் எங்களுக்கு தெரியும்.
உங்களுக்கு வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு தயாராக இருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மனதளவிலும், உடலளவிலும் தயாராக இருக்க வேண்டும். அவர் தொடர்ந்து பயிற்சி ஈடுபட்டு வருவதை நீங்கள் பார்த்தீர்களா? எப்பொழுது வந்தாலும் அவர் தயாராக இருப்பார் என்று நான் நம்புகிறேன். பவர்யில் லோகேஷ் ராகுல் நிதானமாக விளையாடுவதாக கேட்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விதமான ஆட்டம் அணுகுமுறை இருக்கும். அதற்கு தகுந்த மாதிரி அவரது இன்னிங்ஸ்களை வடிவமைப்பார். ராகுல் நல்ல பாமில் இருக்கிறார். அவர் ஆக்ரோஷமாக ஆடுவார். சூழலுக்கு தகுந்தபடி எங்கள் அணி வழிகாட்டுகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Thanthi News