சிறப்பு T20 கிரிக்கெட்டுக்கு பயிற்சியாளர் நியமனம்: முக்கிய முடிவுகளுடன் BCCI!

சிறப்பு டி20 கிரிக்கெட்டுக்காக பயிற்சியாளர் உடன் களமிறங்கும் BCCI.

Update: 2022-12-07 09:18 GMT

இந்திய டி20 அணிக்கு என்று பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க BCCI முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இது ரசிகர்கள் இடையே பெரும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்வு குழு தொடங்கி கேப்டன் ரோகித் சர்மா வரை BCCI நிர்வாகம் ஐ.பி.எல் தொடர் வரை ரசிகர்கள் கோபம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


இதனை தொடர்ந்து இந்திய அணி தோல்விக்கு தேர்வு குழுவின் தவறுகளை காரணம் என்று அனைத்து உறுப்பினர்களையும் பி.சி.சி.ஐ அதிரடியாக நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது டி20 அணியை புதிதாக கட்டமைக்க வேண்டும் என்றும் இந்த அணிக்கு ஹர்திக் தலைமையிலான அணி உருவாக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அது மட்டும் இல்லாமல் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் உள்ளிட்டவர் இணைந்து போட்டிகளில் நடந்த விலகி இருக்க வேண்டும் என்று கருத்துக்களும் எழுதப்பட்டு இருக்கிறது.


குறிப்பாக இங்கிலாந்து நிர்வாகம் எப்படி T20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியை கட்டமைத்ததோ அதேபோல இந்திய நிர்வாகமும் தனித்தனி டி20 கிரிக்கெட் என்று கட்டமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டு வந்தது. இதனுடைய தற்போது BCCI நிர்வாகம் சார்பில் இந்திய டி20 அணிக்கு இன்று பிரத்தேகமாக பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். இவருடைய பதவிக்காலம் 2023 ஆம் ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. முக்கிய முடிவுகளை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News