டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா, இலங்கை இன்று மோதல்!

இருபது ஓவர் உலக கிரிக்கெட் தொடர் இன்று துபாயில் நடைபெறும், சூப்பர்12 சுற்று லீக் ஆட்டத்தில் இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.;

Update: 2021-10-28 12:30 GMT
டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா, இலங்கை இன்று மோதல்!

இருபது ஓவர் உலக கிரிக்கெட் தொடர் இன்று துபாயில் நடைபெறும், சூப்பர்12 சுற்று லீக் ஆட்டத்தில் இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இலங்கை அணி முதல் சுற்றில் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்றதுடன், சூப்பர் 12 சுற்றில் முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்தது. இலங்கை அணியின் பேட்டிங்கில் அசலங்கா, பனுகா ராஜபக்சே, குசல் பெரேரா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் லஹிரு குமரா, சமிகா கருணாரத்னே, சுழற்பந்து வீச்சில் வனிந்து ஹசரங்கா நம்பிக்கை அளிக்கிறார்கள். மீண்டும் சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா அணிக்கு திரும்புவது கூடுதல் பலம் சேர்க்கும்.

மேலும் இலங்கை அணியினர் தங்களது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலமாக வலுவான ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசைக்கு கடுமையான நெருக்கடி அளிக்க முயற்சிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. தற்போது அரையிறுதி வாய்ப்பை பெறுவதற்கு இரண்டு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

Source, Image Courtesy: Maalaimalar


Tags:    

Similar News