T20 தொடர் - தமிழக வீரர் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியை எதிர்கொள்வதற்கு இந்திய அணியில் தமிழக வீரர் தீர்வு செய்யப்படுவாரா?
ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடருக்கு அடுத்து இந்திய ரசிகர்களின் ஆர்வம் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நோக்கில் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.. அந்த வகையில் ஆசிய கோப்பை தொடரில் காலில் ஏற்பட்ட காயும் காரணமாக ஜடேஜா அவர் விலகி இருந்தார். மேலும் இவருடைய காயம் 3 மாதத்திற்கு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக இந்திய அணியில் யார் சேர்க்கப்படுவார்? என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்து வந்தது.
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய மற்றும் ஆஸ்திரிலியா மோத இருக்கிறது. இந்திய அணியில் ஜடேஜாவிற்கு பதிலாக யார் சேர்க்கப்படுவார்? என்பதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. மேலும் வீரர்களை தேர்வு செய்வதற்கு பெரும் போட்டியும் நிலவுகிறது. அக்சர் பட்டேல் ஜடேஜாவிற்கு பதிலாக மாற்று வீரராக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் தலைவரான ரோகித் சர்மா அவர் யாரை அவருக்கு பதிலாக தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம்.
அந்த வகையில் மற்றொரு மாற்று வீரராக வாஷிங்டன் சுந்தர். அவருக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சுற்று வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் டி20 உலக கோப்பை தொடரில் இடம்பெற முடியாவிட்டால், ஆஸ்திரேலிய தொடரில் கண்டிப்பாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. திறமை வாய்ந்த ஆல்ரவுண்டராக கருதப்படும் வாஷிங்டன் சுந்தர்க்கும் தற்போது காலில் அடி ஏற்பட்டு விளையாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.
Input & Image courtesy: Sport News