உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியாவின் முதல் தோல்வி காரணம் என்ன?
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியாவின் முதல் தோல்விக்கு யார் காரணம்? கேப்டன் தகவல்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2 வெற்றிக்கு பிறகு, முதல் முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. அதுவும் தென்ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி உலக கோப்பை தொடரில் முதல் தோல்வியை தழுவியது. 8வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் தற்போது நடந்து வருகின்றது. இதன் இரண்டு சுற்றுகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தற்போது முதல்முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. இதில் டாஸ்க் ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அவரும் லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிசை தொடங்கினார்கள். எதிர்பார்த்தபடி ஆடுகளத்தில் பவுன்ஸ் ஆனது கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் ஆகியோர் சொல்லி வைத்தது போல் ஹிட் பீச் பந்தை துல்லியமாக அடிக்க முடியாமல் போனது.
இந்த மோசமான நிலைக்கு மத்தியில் சூரியகுமார் யாதவ் மட்டும் தாக்குப் பிடித்து விளையாடினர். உயிரோட்டமான இந்த ஆடுகளத்தில் சூரிய குமாரின் பேட்டிங் பிரமாதமாகவே இருந்தது. நேரடியாக மகராஜ் ஓவர்களில் சிக்ஸர் விலாசி பரவசப்படுத்திய அவர் கவுரவமாக 100 ரன்களை கடக்க உதவினார். ஆனால் பின் வரிசையில் அவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. 20 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் 133 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் நன்றாக விளையாடினார்கள்.
இது பற்றி கேப்டன் ரோகித் ஷர்மா கூறுகையில், "நாங்கள் ஃபில்டிங்கில் சரியாக இல்லை என்பதுதான் உண்மை. கடந்த இரண்டு போட்டிகளிலும் நன்றாக தான் இருந்தது. ஆனால் இன்று எங்களுக்கு நிறைய வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள முடியாத ஒரு சூழ்நிலைக்கு சென்று விட்டோம். குறிப்பாக நானும் செய்துவிட்டேன் இந்த தோல்வியிலிருந்து நாங்கள் சரியான பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம்" என்று கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: News