தமிழக அரசு உத்தரவு: டிரீம் 11 கிரிக்கெட் விளையாட்டுக்கு தடை.!

தமிழக அரசு உத்தரவு: டிரீம் 11 கிரிக்கெட் விளையாட்டுக்கு தடை.!;

Update: 2021-02-06 19:17 GMT

ஆன்லைன் சூதாட்ட வி¬ளாயாட்டு தடை செய்யப்படும் என்று பேரவையில் தமிழக அரசு மசோதா தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று முதல் டிரீம் 11 கிரிக்கெட் விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்குப் பின்னர் சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சூதாட்ட விளையாட்டு தடை செய்ய மசோதா தாக்கல் செய்திருந்தார்.

மேலும், ஆன்லைன் சூதாட்டம் ஈடுபட்டால் ரூ.5,000 மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கவும் மசோதாவில் இடம் பெற்றது.
இந்நிலையில், ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 கிரிக்கெட் சூதாட்ட செயலியை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடை எதிரொலியால் இன்று முதல் டிரீம் 11 செயலி இயங்காது என கூறப்பட்டுள்ளது.
 

Similar News