தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவர் இன்று பதவியேற்பு.!

தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவர் இன்று பதவியேற்பு.!

Update: 2021-01-28 12:36 GMT

தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளையின் நிறுவனர் ஆர்.சந்திரசேகர் இன்று சென்னையில் முறைப்படி பதவியேற்கிறார். 

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை பல்வேறு வகையிலான சமூக பணிகளை செய்து வருகிறது. அதிகமாக ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு உதவிகளை இந்த அறக்கட்டளை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆலயத்தின் அறக்கட்டளையின் நிறுவனர் ஆர்.சந்திரசேகர் விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

இது போன்று பல உதவிகளை செய்து வரும் சந்திரசேகருக்கு புதிய பொறுப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதாவது தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முறைப்படி அவர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றுக்கொள்கிறார். அவரது பதவியேற்பு விழாவில் கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா கலந்து கொள்கறார். மேலும், இந்திய பாராலிம்பிக் சங்கத் தலைவர் தீபா மாலிக், பொதுச்செயலாளர் குர்ஷரன் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
 

Similar News