“வாழ்த்து மழையில் தமிழக வீரர் நடராஜன்”.!

“வாழ்த்து மழையில் தமிழக வீரர் நடராஜன்”.!

Update: 2020-12-03 15:27 GMT


இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஐத்ராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தை சேரந்த நடராஜன் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதோடு இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றபயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுலும் இடம் பிடித்து அசத்தினார்.

முதலில் ஆஸ்திரேலியா சுற்றுபயணத்தில் கூடுதல் பவுலராக தேர்வு செய்யப்பட்ட நடராஜன் பின்னர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதால் அந்த இடத்தை பிடித்து டி-20 அணியில் இடம் பிடித்தார். 

முதலில் தொடங்கிய ஒரு நாள் தொடரில் நந்திப் சய்னி காயம் காரணமாக ஒரு நாள் அணியுலும் கூடுதல் பவுலாரக சேர்க்கப்பட்ட நடராஜன் முதல் இரண்டு போட்டிகள் விளையாடாத நிலையில் மூன்றாவது போட்டியில் களம் இறக்கப்பட்டார். அது தமிழகத்தில் மிகபெரிய மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது. மூன்றாவது போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் நடராஜன்.

தமிழக வீரர் ஆஸ்திரேலியாவில் சென்று சர்வதேச கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவது கூடுதல் சிறப்பு. எந்த வீரருக்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் நடராஜனின் கிரிக்கெட் தொடக்கத்திற்கு முதல்வர் மற்றும் பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். 

Similar News