இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற இருக்கும் தமிழக வீரர் நடராஜன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற இருக்கும் தமிழக வீரர் நடராஜன்!
இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தங்கராசு நடராஜன் விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் தமிழக அணியிலிருந்து தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளார்.
தங்கராசு நடராஜன் தமிழக அணியிலிருந்து திடீரென்று விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் முன்னதாக கடந்த 3-ஆம் தேதி வெளியடப்பட்ட தமிழக அணிக்கான வீரர்களின் பட்டியலில் நடராஜன் இடம் பிடித்து இருந்தார். வரும் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 14ஆம் தேதி வரையிலான இந்தத் தொடர் முன்னரே சொல்லியது போல் நடக்க உள்ளது.அதே நேரத்தில் இங்கிலாந்து அணியும் மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 28 ஆம் தேதி வரையிலான தேதிகளில் 5 டி20 போட்டிகளும் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளும் விளையாட உள்ளது. இந்த சூழலில்தான் தங்கராசு நடராஜன் தமிழக அணியிலிருந்து திடீரென்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய நலனுக்காக விளையாடுவது தான் ஒவ்வொரு வீரனுக்கான முதல் கடமை.இந்நிலையில் நடராஜன் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது ஏன்? என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் எஸ்.ராமசாமி பத்திரிக்கையாளர்களுக்கு சில தகவல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : “இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் அணி நிர்வாகத்திற்கு நடராஜன் தற்பொழுது தேவைப்படுகிறார். தேசிய நலனுக்காக விளையாடுவது தான் ஒவ்வொரு வீரனுக்கான முதல் கடமையாகும்.அதன் அடிப்படையில் தான் நடராஜன் தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளார். விரைவில் தமிழக அணியில் அவருக்கான இடத்தில் அவரை போன்ற ஒரு மாற்று வீரர் இடம் பிடிப்பார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் வைத்து பார்த்தால் நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இடம்பிடித்த நடராஜன் மூன்று விதமான இந்திய அணியிலும் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் நடராஜன் விளையாட இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.