தொடரை வென்ற பின்னர் தமிழில் பேட்டியளித்த தமிழக வீரர் நடராஜன்.!
தொடரை வென்ற பின்னர் தமிழில் பேட்டியளித்த தமிழக வீரர் நடராஜன்.!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே இந்திய அணி தொடரை வென்று விட்ட நிலையில் மூன்றாவது டி-20 போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் பின்ச் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க மேத்திவ் வேட் 80 ரன்களும் மேக்ஸ்வேல் 54 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் குவித்தது.
பின்னர் விளையாடிய இந்திய அணியில் கே.எல். ராகுல் டக்அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் கோலி நிலைத்து விளையாடி அரைசதம் விளாசினார். ஷிகர் தவன் 24 ரன்களும் பாண்டியா 20 ரன்களும் அடிக்க ஷ்ரெயர்ஸ் ஐயர் டக் அவுட் ஆக இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில் தொடர் நாயகன் விருது ஹர்டிக் பாண்டியா வென்று அசத்தினார்.
போட்டி முடிந்த பின்னர் பேட்டியளித்த நடராஜன் முரளி கார்த்திக் நடராஜனிடம் என் விக்கெட் வீழ்த்திய பின்னரும் அமைதியாக இருக்க காரணம் என்ற கேள்விக்கு நடராஜனின் பதில் ; நிறையே பேர் என்கிட்ட இந்த கேள்வியை கேட்டு இருக்காங்க அண்ணா : “சிறு வயதில் இருந்தே நான் அப்படித்தான் அண்ணா” கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்து நான் பெரிதாக எதற்கும் ஆவேசம் அடைய மாட்டேன்.
அக்ரெஷன் எல்லாம் சுத்தமா எனக்கு வராது. என்ன நடந்தாலும் ஒரு சிறிய புன்னகையை உதிர்த்து அங்கிருந்து கிளம்பி விடுவேன் என்று நடராஜன் வெகுளியாக பதிலளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.டி-20 தொடரை ஆஸ்திரேலியாவில் வென்று அசத்திய இந்திய அணி.!