முஷ்டாக் அலி கோப்பை தொடரை 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வென்றது தமிழக அணி.!

முஷ்டாக் அலி கோப்பை தொடரை 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வென்றது தமிழக அணி.!

Update: 2021-02-02 07:44 GMT

 குஜராத் மாநிலம்அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற பரோடா அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.2020-2021 க்கான சையது முஷ்டாக் அலி போட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்றது இந்த போட்டியில் தமிழ்நாடு அணி 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசத்தியது, இறுதியாக நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பரோடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வெற்றி பெற்ற தமிழக அணி பவுலிங் தேர்வு செய்தது, முதலில் களமிறங்கிய பரோடா அணி 20 ஓவரில் 120/9 என சித்தார்த் சுழலில் சிக்கி சுருண்டது . 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணி வீரர்கள் முதலில் ரன்களை குவிப்பதில் சற்று திணறினர் 12-வது ஓவரில் 67 ரன்களுக்கு இரண்டு விக்கெட்கள் இழந்தது.பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு 16 பந்துகளுக்கு 22 ரன்கள் எடுத்தார், பரோடா அணி சார்பில் விஷ்ணு சோலங்கி 49 ரன்கள் எடுத்து அசத்தினார்.

மேலும் தமிழக அணி சார்பில் சித்தார்த் 4 விக்கெட்களை எடுத்து சாதனை படைத்தார்.தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி இதுவரை இரண்டு முறை டைட்டில் பட்டத்தை பெற்று உள்ளது இதற்கு முன் 2007 இல் நடைபெற்ற போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

Similar News