வங்காள அணியுடன் ஒருநாள் கிரிக்கெட் தொடர்: தோல்விக்கு பின் மீண்டு வருமா இந்திய அணி?

நியூசிலாந்து அணியுடன் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியின் தோல்விக்கு பிறகு வங்காள அணிக்கு எதிராக வெற்றி பெறுமா?

Update: 2022-12-04 03:22 GMT

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவியது. குறிப்பாக இந்திய நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி தழுவி இருக்கிறது. இதற்கு அடுத்து மீண்டும் இந்தியா மற்றும் வங்காள அணியுடன் மூன்று ஒருநாள் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. 


வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. நியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டி தொடரில் வெற்றி வாய்ப்பை தழுவி நழுவு விட்டதன் காரணமாக, தற்பொழுது வங்காள அணியுடன் டெஸ்ட் போட்டியில் மீண்டும் இந்திய அணி கம் பேக் கொடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறது.


சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் கம்பேக் தரவுள்ளனர். அடுத்த உலகக்கோப்பைகான ஏற்பாடாக இது இருக்கும். இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் உள்ள மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. சரியாக காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக முன்கூட்டியே வங்கதேசம் சென்றுள்ள இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் இந்திய அணியின் முதன்மை வீரரான முகமது ஷமி தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து முற்றிலுமாக விலகி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News