வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹாசனை எடுக்க போட்டி போடும் அணிகள்.!

வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹாசனை எடுக்க போட்டி போடும் அணிகள்.!

Update: 2021-02-04 11:30 GMT

பங்களாதேஷின் நட்சத்திர வீரரான ஷாகிப் அல் ஹசன் ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் ஒரு வருடகாலம் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டார். இதன்பின் அதிரடியாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் களம் இறங்கிய இவர், தனது அணியை வெற்றி பெறச் செய்தார் . மூன்று போட்டிகளில் பங்கேற்று 6 விக்கெட்களை வீழ்த்தி 113 ரன்களை குவித்தார்.

மிடில் ஆடர் களில் சிறப்பாக செயல்படும் இவர் பந்து வீச்சிலும் திறம்பட செயல்படுவதில் வல்லவர் ஷகிப் அல் ஹசன் இதுவரை 63 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 746 ரன்களை எடுத்துள்ளார் மேலும் 59 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மீண்டும் இவரை எடுப்பதற்கு மூன்று அணிகள் போட்டி போட்டுக் கொண்டு உள்ளது1.கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி பேட்டிங் ஆர்டர் மிக சிறப்பாக உள்ளது துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கெயில் மிக சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் மிக சிறப்பாக செயல்படுகின்றனர்.

இருந்தபோதும் அந்த அணியில் மிடில் ஆர்டர்களில் திறம்பட கொண்டு செல்வதற்கு எந்த ஒரு வீரரும் சரியாக செயல்படவில்லை.இதனால் அந்த அணிக்கு அனுபவம் வாய்ந்த மேலும்ஒரு வீரர் தேவையுள்ளது, இதனடிப்படையில் அந்த அணிக்கு ஷாகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒரு வெளிநாட்டு வீரரை ஏலத்தில் எடுக்கலாம். எனவே சென்னையும் ஷகிப் அல் ஹாசனை எடுக்க போட்டி போடும். காரணம் அவர் ஆல் ரவுண்டர் மற்றும் சென்னை அணி இந்த ஆண்டு இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களை கழட்டி விட்டுள்ளது. எனவே இவரை எடுக்க சென்னை அண்ணி முயற்சி செய்யும்.

Similar News