8வது புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ், டெல்லி அணிகளின் போட்டி டிரா!

12 அணிகள் பங்கேற்றிருக்கும் 8வது புரோ கபடி லீக் போட்டி கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று இரவு (ஜனவரி 1) தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி அணிகள் விளையாடின.

Update: 2022-01-02 06:08 GMT

12 அணிகள் பங்கேற்றிருக்கும் 8வது புரோ கபடி லீக் போட்டி கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று இரவு (ஜனவரி 1) தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி அணிகள் விளையாடின.

இந்த போட்டியில் தலைவாஸ் அணி ஒரு கட்டத்தில் 149 என்று முன்னிலையில் இருந்தது. இதன் பின்னர் டெல்லி அணி அடுத்தடுத்த புள்ளிகளை குவித்தது. டெல்லி அணியின் வீரர் நவீன்குமாரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 28 20 என்று வலுவான நிலைக்கு உயர்ந்தது. கடைசி நேரத்தில் தமிழ் தலைவாஸ் அணி நிதானமுடன் விளையாடியது. 


இறுதியில் தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி அணிகளுக்கு இடையில் ஆட்டம் 30 30 என்ற புள்ளிக்கணக்கில் டிராவுடன் நிறைவு பெற்றது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றியையும், ஒரு தோல்வியையும், 3 டை என்று 15 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News