இந்தியா அணியில் இருந்து இரண்டு முக்கிய வீரர்களை முதல் இரண்டு போட்டிகளில் நிக்கியது பிசிசிஐ.!

இந்தியா அணியில் இருந்து இரண்டு முக்கிய வீரர்களை முதல் இரண்டு போட்டிகளில் நிக்கியது பிசிசிஐ.!

Update: 2020-11-25 14:17 GMT


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான தொடர் தான் தற்பொழுது கிரிக்கெட் வட்டரத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ள தொடர் ஆகும். இந்த தொடருக்காக இந்திய அணி ஐபிஎல் முடிவடைந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்று திவிர பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றது.

இந்த சுற்றுபயணத்தில் இந்தியா அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் உள்ளன. மூன்று வீதமான தொடருக்கான இந்திய அணி வீரர்களும் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளனர். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17-ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. மேலும் இரண்டாவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே போட்டியாக டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் கோலி அவரது மனைவி பிரசவத்திற்காக நாடு திரும்பி விடுவார்.

அதனால் மீதமுள்ள 3 போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் காயத்திற்கான பயிற்சி எடுத்து வரும் ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா சென்றால் 14 நாட்கள் குவாரண்டைன் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்.

அப்படி இருக்க முதல் போட்டியில் அவர்கள் பங்கேற்க வேண்டுமானால் டிசம்பர் 3ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்ல வேண்டும். ஆனால் ரோகித் சர்மாவிற்கு டிசம்பர் 8-ஆம் தேதி புறப்படவே தேசிய கிரிக்கெட் அகாடமி அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. எனவே இருவரும்  முதல் இரண்டு  போட்டிகளில்  இருந்து பிசிசிஐ நீக்கி உள்ளது.

Similar News