அடுத்த ஐபிஎல் தொடரில் புதிதாக ஒன்று அல்லது இரண்டு அணிகளை இணைக்க பிசிசிஐ திட்டம்.!

அடுத்த ஐபிஎல் தொடரில் புதிதாக ஒன்று அல்லது இரண்டு அணிகளை இணைக்க பிசிசிஐ திட்டம்.!

Update: 2020-11-12 12:34 GMT


ஐபிஎல் 2020 தொடர் சிறப்பாக ஐக்கிய அரபு அமிரக்த்தில் நடைபெற்று முடிவடைந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடர் மீது எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஆம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர் சவ்ரோ கங்குலி அறிவித்துள்ளார். 


சென்னை அணி ரசிகர்களுக்கு இந்தியாவில் அடுத்த ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என்ற செய்தி பெரிய மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. அதே போல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சி தரும் அறிவிப்பை பிசிசிஐ அறிவிக்க உள்ளது. வரும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒன்று அல்லது இரண்டு புதிய ஐபிஎல் அணிகள்  இணைக்கபட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 


இந்த புதிய அணிகள் தொடர்பான அறிவிப்புகள் வரும் திபாவளி அன்று  வெளியாக அதிக வாய்ப்பு என தெரிகின்றது. அதோடு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பெரிய எலம் நடுத்தபட அதிக வாய்ப்பு வந்துள்ளது. இத்தனை அறிப்புகளும் ஐபிஎல் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து மகிழ்ச்சி தரும் செய்திகளாக வெளியாகி உள்ளது.

அதில் ஒரு ஐபிஎல் அணி புதிதாக அமைந்துள்ள அகமதாபாத் மைதானத்தை மையமாகவைத்து செயல்படும் என தெரிக்கின்றது. எனவே அடுத்து ஐபிஎல் தொடரில் ஓன்பது அல்லது பத்து ஐபிஎல் அணிகள் பங்கேற்க உள்ளது. 

Similar News