ஆஸ்திரேலியா தொடரை இந்திய அணி வெல்லுவது கடினம் என பயிற்சியாளர் கருத்து.!
ஆஸ்திரேலியா தொடரை இந்திய அணி வெல்லுவது கடினம் என பயிற்சியாளர் கருத்து.!
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி-20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட்டது. தற்பொழுது ஆஸ்திரேலியாவில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் டி -20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு கோலி தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. ஆனால் டெஸ்ட் தொடரில் முதல் போட்டி மட்டும் தான் வீராட் கோலி விளையாடுவார். மற்ற போட்டிகளுக்கு ரோஹித் சர்மா அணியில் இணைவார் என கூறப்பட்டுள்ள நிலையில். ஐனவரி மாதம் வீராட் கோலிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் நாடு திரும்புகிறார். இந்நிலையில் இது இந்திய அணிக்கு பெரிய தாக்கத்தை கொடுக்கும் என ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கூறியுள்ளார்.
இது குறித்து ஜஸ்டின் லங்கர் கூறுகையில், “முதல் டெஸ்ட் முடிந்ததும் கோலி நாடு திரும்ப இருப்பதால் அது நிச்சயம் டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு தாக்கத்தை (பாதிப்பை) ஏற்படுத்தும். கோலி இல்லாததால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்று நினைக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவின் ரிச்மோன்ட் கால்பந்து கிளப் அணியில் இருந்து நட்சத்திர வீரர் டஸ்டின் மார்ட்டினை எடுத்து விட்டால் எப்படி இருக்கும்? அது போன்று தான் கோலி இல்லாத நிலைமையும்.
அனேகமாக எனது வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த வீரர் கோலி தான். இவ்வாறு சொல்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவரது பேட்டிங்குக்காக மட்டுமின்றி விளையாட்டு மீதான அவரது அதீத ஆர்வமும், உத்வேகமிக்க பீல்டிங்குக்காகவும் இதை குறிப்பிடுகிறேன். களத்தில் அவர் எல்லா வகையிலும் வெளிப்படுத்தும் துடிப்புமிக்க ஆற்றலை கண்டு வியப்படைகிறேன்.
அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தன்னுடைய குழந்தையின் பிறப்புக்காக அவர் இந்தியா திரும்ப எடுத்த முடிவையும் உயர்வாக மதிக்கிறேன்” என்றார்.