மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இரண்டு முக்கிய வீரர்களை இணைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.!
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இரண்டு முக்கிய வீரர்களை இணைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.!
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 169 ரன்களும், ரஹானே 67 ரன்களும், ரிஷப் பண்ட் 58* ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 164 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியும் அடைந்தது. இந்தநிலையில், வரும் 24ம் தேதி துவங்க இருக்கும் இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
மூன்றாவது போட்டிக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள 17 வீரர்கள் கொண்ட பெயர் பட்டியலில், சீனியர் வீரர்களான ஜானி பரிஸ்டோ மற்றும் மார்க் வுட் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இருவரும் கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாதவர்கள். இதுதவிர வழக்கமான அனைத்து வீரர்களும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி;ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பாரிஸ்டோ, டாமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ராரி பர்ன்ஸ், ஜெக் க்ராவ்லி, பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக் லீச், ஓலி போப், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஓலி ஸ்டோன், கிரிஸ் வோக்ஸ், மார்க் வுட்.