நடராஜன் வருகின்ற தொடரில் இந்த விருதை பெறுவார்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் பெருமிதம்.!
நடராஜன் வருகின்ற தொடரில் இந்த விருதை பெறுவார்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் பெருமிதம்.!
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து ஒருநாள் தொடரையும் இழந்த இந்திய அணி, மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அடுத்ததாக நடைபெற்று வரும் டி.20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.
கடந்த 3 போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு தமிழக வீரர் நடராஜனின் துல்லியமான பந்துவீச்சே மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அறிமுகமமான முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய நடராஜன், டி20 தொடரிலும் தனது பங்களிப்பை மிக சரியாக செய்து வருகிறார்.
குறிப்பாக ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி சார்பில் பந்து வீசிய அனைத்து பந்து வீச்சாளர்களும் 35+ ரன்கள் வாரி வழங்கிய போதிலும் நடராஜன் மட்டும் தனது துல்லியமான பந்து வீச்சின் மூலம் வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
அந்தவகையில் நடராஜன் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான நடப்பு டி 20 தொடரின் தொடர் நாயகனாக நடராஜன் தேர்வு செய்யப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், “நான் நடராஜனுக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
அவருடைய வாழ்க்கை சூழ்நிலையில், இந்த பெர்பார்மன்ஸ் நம்பமுடியாத வகையில் உள்ளது. நம்பிக்கை வைத்து கடுமையாக உழைத்து, உங்களுக்குள்ளேயே நம்பிக்கை வளர்த்தால் எல்லாமே சாத்தியம்தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, அந்நாட்டு மண்ணில் தொடர் நாயகன் விருதை பெற்றால் அவரது நம்பிக்கையை உயர்த்துவதாக இருக்கும். இது இந்திய அணிக்கும் மிகப்பெரியதாக இருக்கும். அவர் எங்கிருந்து வந்தார், அணிக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது சிறந்த கதை என்றார்.