முதல் டெஸ்ட் போட்டியின் பிளைங்க் லெவனை அறிவித்தது இந்திய அணி.!

முதல் டெஸ்ட் போட்டியின் பிளைங்க் லெவனை அறிவித்தது இந்திய அணி.!

Update: 2020-12-16 15:43 GMT

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், அடுத்ததாக நடைபெற்ற டி.20 தொடரை 2-1 என்ற இந்திய அணியும் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை துவங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நாளை துவங்க உள்ள இந்த முதல் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை, இந்திய கிரிக்கெட் வாரியம் இன்றே அறிவித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், கே.எல் ராகுல், சுப்மன் கில் முகமது சிராஜ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

பயிற்சி போட்டியின் போது சதம் அடித்து அசத்திய ரிஷப் பண்ட்டிற்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. விக்கெட் கீப்பராக விர்திமான் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துவக்க வீரர்களாக மாயன்க் அகர்வாலும், ப்ரித்வி ஷாவும் அணியில் இடம்பெற்றுள்ளனர். அதே போல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ்விற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி 11:
மாயன்க் அகர்வால், ப்ரித்வி ஷா, சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, விர்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திர அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

Similar News