இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்து மாற்றங்களுடன் களம் இறங்கும் இந்திய அணி!
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்து மாற்றங்களுடன் களம் இறங்கும் இந்திய அணி!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடந்த நவ்.17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடந்த இந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை பெற்றது.
முதல் இன்னிங்சில் தொடக்கத்திலிருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியும் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 53 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டும் எடுத்திருந்தது. 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்பொர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்த அணி பல மாற்றங்களுடன் களம் இறங்க உள்ளது. பிரித்திவ் ஷா , வீராட் கோலி, சாஹா, சமி என பலர் இந்திய அணியில் இருந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டர்கள் என்னும் நிலையில் சுக்மன் கில், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் , ரவிந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.