ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி : இந்திய அணி தென்ஆப்பிரிக்காவிற்கு திட்டமிட்டப்படி சுற்றுப்பயணம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் தற்போது ஒமிக்ரான் என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் இருந்து வருவதற்கும், செல்வதற்கும் உலக நாடுகள் தடை விதித்துள்ளது.

Update: 2021-12-01 08:14 GMT

தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்வது குறித்து மத்திய அரசின் அனுமதிக்காக பிசிசிஐ காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்று முடிவு பெற்றது. இதனிடையே இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியானது வருகின்ற டிசம்பர் 17ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் தற்போது ஒமிக்ரான் என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் இருந்து வருவதற்கும், செல்வதற்கும் உலக நாடுகள் தடை விதித்துள்ளது. இதனால் டிசம்பர் 8ம் தேதி திட்டமிட்டப்படி இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு செல்லுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவில் தற்போது விளையாடி வருகிறது. ஏ அணி தென்னாப்பிரிக்காவில் விளையாடி வருவதற்கு இந்திய அரசுக்கு அந்நாடு நன்றியை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறும்போது, தற்போது தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் கருதப்படுகிறது. எனவே தென்னாப்பிரிக்கா போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News