கடைசி ஒரு நாள் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது இந்திய அணி .!

கடைசி ஒரு நாள் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது இந்திய அணி .!

Update: 2020-12-02 19:45 GMT

இந்தியா- ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த தொடரை ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வென்ற நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணியில் தவன் 16 ரன்னிலும் கில் 33 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த வீராட் கோலி 63 ரன்கள் அடித்து அவுட் ஆக அதன் பின்னர் களம் ஸ்ரேயஸ் ஐயர் 16 ரன்னிலும் கே.எல் ராகுல் 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் ஹர்டிக் பாண்டியா இருவரும் இந்திய அணிக்கு சிறப்பான ஆட்டத்தை கொடுக்க ஹர்டிக் பாண்டியா 92 ரன்களும் ஜடேஜா 66 ரன்களும் அடிக்க இந்திய அணி 302-5 ரன்கள் சேர்த்தனர்.  

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் பின்ச் 75 ரன்களும் மேக்ஸ்வெல் 59 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க இந்திய அணி பேராடி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை வென்றது. ஆட்டநாயகனாக ஹர்டிக் பாண்டியாவும் தொடர் நாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டனர். 

Similar News