தங்கத்தை கோட்டை விட்டு அழுத வீராங்கனை - ஆறுதல் கூறிய பிரதமர்
காமன்வெல்த் போட்டியில் தங்கத்தை தவற விட்டதற்காக அழுத வீராங்கனைக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியது வைரலாகி வருகிறது.
காமன்வெல்த் போட்டியில் தங்கத்தை தவற விட்டதற்காக அழுத வீராங்கனைக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியது வைரலாகி வருகிறது.
காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரிஸ்டைல் மல்யுத்தத்தில் தங்கத்தை தவற விட்டதற்காக கண்ணீர் விட்டார் இந்திய வீராங்கனை பூஜா கெலாட்.
பெண்களுக்கான 50 கிலோ பிரிஸ்டைல் மல்யுத்தத்தில் அவரால் தங்கத்தை தவற விட்டு வெண்கலமே வெல்லம் முடித்தது, இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர், 'அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் தங்கம் வென்று இந்த மண்ணில் நம் தேசிய கீதம் ஒலிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை எனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அவற்றை சரி செய்வேன்' என கூறினார்.
மேலும் இந்த வீடியோவை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதவி விட்டுள்ளார். அதில், 'பூஜா நீங்கள் வென்றுள்ள பதக்கம் கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறது அன்றி மன்னிப்புகளுக்கு மன்னிப்பு அல்ல உங்கள் வாழ்க்கை பயணம் எங்களுக்கெல்லாம் உத்தேகம் அளிக்கிறது உங்கள் வெற்றி எங்களை மகிழ்விக்கிறது, பிரகாசமாக இருங்கள்' எனக் கூறியுள்ளர் பிரதமரின் இந்த கனிவு பலர் மத்தியிலும் பாராட்டக் குவித்து வருகிறது.