டெல்லி அணியில் இருந்து இரண்டு முக்கிய வீரர்களை தூக்கியது ஆர்சிபி அணி.!
டெல்லி அணியில் இருந்து இரண்டு முக்கிய வீரர்களை தூக்கியது ஆர்சிபி அணி.!
ஐபிஎல் தொடரின் 14வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் சீசனுக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இதனிடையே நேற்று ஐபிஎல் அணிகள் தங்களின் வீரர்களை தக்கவைத்து கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் என்பதால் பெரிய அளவில் வீரர்களில் மாற்றம் இன்றி அணிகள் பெரும்பாலன வீரர்களை தக்கவைத்துள்ளனர். சென்னை அணியில் ஆறு வீரர்களும் மும்பை அணியில் ஐந்து வீரர்களும் வெளியிட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் ஸ்மிதையை வெளியேற்றி உள்ளனர். இனி ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக இருப்பார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெங்களூரு
அணி மட்டும் தான் இந்த ஆண்டு டிரேடிங்க் முறையில் வீரர்களை கைப்பற்றி உள்ளது.
அந்த வகையில் டெல்லி அணியில் இருந்து டெனியல் சாம்ஸ் மற்றும் ஹர்சல் படேல் ஆகிய இரண்டு வீரர்களை டிரெடிங்க் செய்துள்ளது. இரண்டு வீரர்களும் ஆல்-ரவுண்டர்ஸ் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதே போல் பெங்களுரு அணி பின்ச், மோரிஸ் போன்ற முக்கிய வீரர்களையும் அணியில் இருந்து கழட்டி விட்டுள்ளது.