சிஎஸ்கே அணிக்கு இது தான் சிறந்த ஏலம் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து.!

சிஎஸ்கே அணிக்கு இது தான் சிறந்த ஏலம் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து.!

Update: 2021-02-21 09:58 GMT

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் கைவசம் இருக்கும் தொகையை வைத்து தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தன.இந்த ஏலத்தில் யாருமே எதிர்பார்க்காத சில வீரர்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

குறிப்பாக ஆல் ரவுண்டரான கிருஷ்ணப்பா கவுதம் 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது பலருக்கு அதிர்ச்சியையே கொடுத்தது. அதுவும் கைவசம் இருக்கும் மொத்த பணத்தையும் அப்படியே வைத்து அழகு பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வீரருக்கு 9 கோடி ரூபாய் கொடுத்தது தான் பலருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அதே போல் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான மொய்ன் அலியை 7 கோடி ரூபாய்க்கும், இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாராவை 50 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்தது.

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “மறுகட்டமைப்பு என்பது சிஎஸ்கேவை விட மற்ற அணிகளுக்குத்தான் அதிகம் தேவை. கடந்த சீசன் தான் சிஎஸ்கேவின் மோசமான சீசன்; பிளே ஆஃபிற்கு கூட முன்னேறவில்லை. ஆனாலும் 14வது சீசனுக்கான ஏலத்தில் வெறும் 3 வீரர்களை மட்டும் எடுத்துவிட்டு மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தனர் சிஎஸ்கே அணி நிர்வாகிகள்.

இதுதான் அந்த அணியின் பெஸ்ட் ஏலம். இதுமாதிரி தான் நீண்டகாலத்திற்கு தாக்குப்பிடிக்கக்கூடிய அணியை கட்டமைக்க வேண்டும்.ஆரம்பத்தில் மேக்ஸ்வெல்லை எடுக்க ஆர்வம் காட்டிய சிஎஸ்கே, அவரை எடுத்திருக்க வேண்டிய தொகையில் மொயின் அலி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய இருவரை எடுத்துவிட்டது.

ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் வீரர்களை அள்ளிக்கொண்டிருந்தபோது, சிஎஸ்கே தங்களுக்கு தேவையான சில வீரர்களை மட்டும் குறிப்பிட்டு எடுத்தது. அதுதான் நல்லது. பணத்தை வாரி இறைப்பதை விட, தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும்தான் எடுக்க வேண்டும். அந்த வகையில், சிஎஸ்கேவின் மிகச்சிறந்த ஏலம் இதுதான் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

Similar News