தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: 73 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கம் வென்று சரித்திரத்தில் இடம்பிடித்த இந்திய அணி!

Update: 2022-05-15 11:48 GMT

சர்வதேச நாடுகளிடையே நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரில் முதல் முறையாக தங்கம் வென்று இந்திய அணி வரலாற்றில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற போட்டியில், நேற்று (மே 14) ஆண்களுக்கான அரையிறுதியில் இந்திய அணி 32 என்கின்ற கணக்கில் முன்னாள் சாம்பியனான் டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதன்படி இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் (ஒற்றையர் பிரிவு) சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டிசிராக் ஷெட்டி (இரட்டையர் பிரிவு) உள்ளிட்டோர் தங்களின் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

அதே போன்று இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய அணி, நடப்பு சாம்பியன் இந்தோனியாவுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டது. அதன்படி நடப்பு சாம்பியனான இந்தோனேஷிய அணியை 3-0 என்கின்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. கிட்டத்தட்ட 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி தங்கம் வென்று சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: The Bridge

Tags:    

Similar News