தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Update: 2022-05-15 12:34 GMT

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. அதில் ஆண்கள் பிரிவில் நடைபெறும் போட்டியில் 12ம் தேதி நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 32 என்கின்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சுமார் 43 ஆண்டுகளுக்கு பின்னர் அரையிறுதியில் நுழைந்தது.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்கள் அணி 32 என்கின்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் ஆண்கள் இறுதி போட்டியில் இன்று தொடங்கியது. இதில் இந்தோனேசிய அணியுடன் மோதியது. இதில் இந்திய வீரர் லக்சயா சென் முதல் போட்டியில் 8-21, 21-17, 21-16 என்ற புள்ளி கணக்கில் அந்தோணி கின்திங்கை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால், இறுதி போட்டியில் 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து 2வது சுற்றில் இந்திய இணை சாத்விக் சிராக் இணை வெற்றி பெற்றனர். 3வது போட்டியில் இந்திய அணியின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தாமஸ் கோப்பையை வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வரலாற்றுமிக்க வெற்றியை பதிவு செய்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: சரித்திரம் படைத்தது இந்திய பேட்மிண்டன் அணி! தாமஸ் கோப்பையை இந்திய அணி வென்றிருப்பதால் ஒட்டுமொத்த தேசமும் மிகப்பெரிய சந்தோஷத்தில் உள்ளது. எங்கள் திறமையான அணியினருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றி மூலம் பல விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source,Image Courtesy: Twiter

Tags:    

Similar News