IPL போல் ஜோராக நடைபெற இருக்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர்...

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் சிறப்பாக நடைபெற இருப்பதாக தகவல்.

Update: 2023-06-04 03:23 GMT

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற முடிந்து இருக்கிறது. இதில் தமிழகத்தின் மிகவும் பிரத்தேகமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் காணும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பிரீமியம் லீக் தொடர் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முதல் 2 ஆண்டுகளில் வெற்றியை சுவைக்காத மதுரை அணி 2018ஆம் ஆண்டு சீகம் மதுரை பேந்தர்ஸாக பெயர் மாற்றத்துடன் களமிறங்கி முதன்முறையாக தமிழ்நாடு பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது.


TNPL விளையாட்டு மூலமாக தமிழகத்தில் இளம் விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்த விளையாட்டு வீரர்களை பல்வேறு தரப்பினரும் ஏலம் எடுத்து தங்களுடைய அணிகளில் ஏற்படுத்த முயற்சி செய்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணிக்கான வீரர்களை டிராஃப்ட் முறையில் தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால் இந்தாண்டு முதன்முறையாக ஐபிஎல் T20 லீக்கைப் போல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரிலும் ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலத்தின் அடிப்படையில் தேர்வு செய்தனர்.


மேலும் தமிழக விளையாட்டு வீரரான சாய் சுதர்சன் தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடினர். குஜராத் அணி இவரை கம்மியான தொகையில் தன் ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால் இந்த முறை தமிழகத்தின் உள் மாநிலத்தில் கோவை அணிக்காக தேர்வு செய்யப்படும் இவருக்கு ஐபிஎல் விட அதிகமான தொகை கொடுத்து ஏலம் எடுத்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக வீரரான சாய் சுதர்ஷன் 21.6 இலட்சங்களுக்கு டி.என்.பி.எல்லின் லைகா கோவை கிங்ஸால் வாங்கப்பட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News