சமபலத்துடன் மோதும் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள்!

Update: 2022-04-10 05:47 GMT
சமபலத்துடன் மோதும் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறவுள்ள 20வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகிறது.

இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீச்சை நடத்துகிறது. தற்போது வரை ராஜஸ்தான் அணி 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.

அதே போன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 4 போட்டியில் விளையாடி 3 போட்டியில் வெற்றிப் பெற்று, புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. தற்போது வலுவான நிலையில் உள்ள லக்னோ, இம்முறை கோப்பையை வென்றாக வேண்டிய நிலையில் தீவிரமாக விளையாடி வருகிறது. அதன்படி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News