இன்று சென்னை, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை! பிளே ஆஃப் தகுதியை அடையுமா சி.எஸ்.கே!

சென்னை, சூப்பர் கிங்ஸ் அணி, இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடுகிறது.;

Update: 2021-09-30 07:30 GMT
இன்று சென்னை, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை! பிளே ஆஃப் தகுதியை அடையுமா சி.எஸ்.கே!

சென்னை, சூப்பர் கிங்ஸ் அணி, இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடுகிறது.

14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று இரவு (செப்டம்பர் 30) சார்ஜாவில் நடைபெறும் 44வது லீக் ஆட்டதத்ல் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடுகிறது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 போட்டியில் விளையாடி 8 வெற்றி பெற்று, 2 தோல்வி என 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் உள்ளது. பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்திட்ட நெருங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் முதல் அணியாக பிளேஆஃப் சுற்றை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே 10 ஆட்டத்தில் 2 வெற்றியும், 8 தோல்வியை பிடித்துள்ள ஐதராபாத் அணி, பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News