ஐபிஎல் இன்று இரண்டு போட்டிகள்!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக தடைப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (செப்டம்பர் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.

Update: 2021-09-28 08:22 GMT

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக தடைப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (செப்டம்பர் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.

அந்த வகையில் ஷார்ஜாவில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 2வது இடத்திலும், கொல்கத்தா அணி 4வது இடத்திலும் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 27 போட்டியில் விளையாடி உள்ளது. அதில் கொல்கத்தா 14 முறையும், டெல்லி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

மற்றொரு போட்டி இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் மும்பை 14 போட்டியிலும், பஞ்சாப் 13 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News