ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு குவியும் வாழ்த்துக்கள் !

பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்ப்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.;

Update: 2021-08-02 04:53 GMT
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு குவியும் வாழ்த்துக்கள் !

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.


இவருக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சியின் தலைவர்கள், சினிமா நடிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில், தமிழக பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


கடந்த 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Twiter

Image Courtesy: Pm Twiter

Tags:    

Similar News