ஒலிம்பிக் இலக்குத் திட்டத்தின் கீழ் நிதியுதவி: பெறுகிறார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து!
ஒலிம்பிக் இலக்குத் திட்டத்தின் கீழ் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து அனைத்துப் போட்டிகளுக்கும் அழைத்துச் செல்ல ஏதுவாக நிதியுதவி வழங்க ஒப்புதல்.
ஒலிம்பிக் இலக்குத் திட்டத்தின் கீழ் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்துவின் பயிற்சியாளர் மற்றும் உடற்தகுதிப் பயிற்சியாளரை அனைத்துப் போட்டிகளுக்கும் அழைத்துச் செல்ல ஏதுவாக நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. ஒலிம்பிக் இலக்குத் திட்டத்தின் கீழ் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்துவின் பயிற்சியாளர் மற்றும் உடற்தகுதி பயிற்சியாளரை அனைத்துப் போட்டிகளுக்கும் அழைத்துச் செல்ல ஏதுவாக நிதியுதவி வழங்க மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஒலிம்பிக் செல் இயக்கம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப், ஸ்விஸ் ஓபன் மற்றும் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்களில் பங்கேற்க செல்லும்போது, தமது பயிற்சியாளர் விதி சௌத்ரி, உடற்தகுதிப் பயிற்சியாளர் ஸ்ரீகாந்த் மடப்பள்ளி ஆகியோரை அழைத்துச் செல்ல நிதியுதவி அளிக்கப்படும்.
அதாவது விசா, விமானக் கட்டணம், தங்கும் வசதி, உணவுச் செலவு, இதர செலவுகளுக்கான தினசரி படி உள்ளிட்ட அனைத்திற்கும் நிதி வழங்கப்படும். இதேபோன்று உலகச் சாம்பியன் பதக்க துப்பாக்கிச் சுடும் வீரர் அனிஷ் பன்வாலா வெளிநாட்டுப் பயிற்சியாளர் ரல்ஃப் ஷுமன் உதவியுடன் ஜெர்மனியில் பயிற்சி மேற்கொள்வதற்கான நிதியுதவியை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
Input & Image courtesy: News