பிங்க் பால் டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய கேப்டன்களின் சாதனையை முறியடித்துள்ளார் வீராட் கோலி!
பிங்க் பால் டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய கேப்டன்களின் சாதனையை முறியடித்துள்ளார் வீராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக இந்தியாவில் உள்ள உலகின் மிக பெரிய மைதானமான அகமதாபாத் மொட்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் தாக்குதலின் காரணமாக 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக பின்னர் விளையாடிய இந்தியா அணி ரோஹித் சர்மா 66 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக இந்திய அணி முதல் இன்னிங்சில் 145 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் தொடங்கிய இங்கிலாந்து அணியில் அனைத்து வீரர்களும் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சில் சுருண்டது. 81 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில் 48 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இந்தியா அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். 22 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற தோனியை விட அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற கேப்டன் என்ற சாதனையை 35 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளார்.