இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுகிறது. மேலும், விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதற்கு அவருக்கு இந்திய அணி நிர்வாகம் அழுத்தம் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விராட் கோலிக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: விராட் கோலிக்கு 33 வயது மட்டுமே ஆகிறது. அவர் இந்திய அணியில் ஐந்து ஆண்டுகள் நல்ல கிரிக்கெட் வீரராக வலம் வருவார். எனவே அவர் தனது பிரச்சனைகளை மறந்துவிட்டு அமைதியுடன் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். விராட் கோலி போட்டிகளில் இருந்து மூன்று மாதங்கள் ஓய்டு எடுத்தால் சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்துவார் என நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Maalaimalar
Image Courtesy: Republic World