இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இடம்பெறாதது குறித்து விராட் கோலி விளக்கம்!
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இடம்பெறாதது குறித்து விராட் கோலி விளக்கம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோலி டாஸ் இழந்ததால் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வந்ததை நாம் கண்டோம்.
இந்த முறை விராட்கோலி டாஸ் வென்று இருப்பதால் இந்திய அணிக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.இந்த போட்டியில் இந்திய அணி மூன்று முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மூவரும் வெளியில் அமர்த்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் உள்ளே எடுத்து வரப்பட்டுள்ளனர்.
இன்றையபோட்டியில் திடீரென ஏன் பும்ராஹ் வெளியில் அமர்த்தப்பட்டார் என்பதற்கு பதிலளித்துள்ளார் விராத் கோஹ்லி.“இங்கிலாந்து அணியுடனான தொடர் என்பது நீண்ட தொடராக இருக்கிறது. பும்ராஹ் 3 விதமான போட்டிகளிலும் ஆடி வருகிறார். தேவையான நேரத்தில் அவருக்கு ஓய்வு கொடுப்பது அவசியம் என நான் நினைக்கிறேன்.
இந்த மைதானம் சூழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் குல்தீப் மற்றும் அக்சர் உள்ளே இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடுவதற்கு சிராஜ் இருக்கிறார். இவர் நல்ல பார்மில் இருப்பதால் போதுமான வரை இவரையே பயன்படுத்த நினைத்தேன். இது பும்ராவிற்கு ஓய்வாக அமையட்டும்.வாஷி சென்ற போட்டியில் நன்றாக ஆடினாலும், பந்துவீச்சு சரியாக எடுபடவில்லை. அதேநேரம் இடது கை சூழல் தேவைப்பட்டது. அதற்க்காக அக்சர் உள்ளே வந்திருக்கிறார்.” என பதிலளித்தார்.