பாகிஸ்தான் வீரரை கட்டிப்பிடித்து பாராட்டிய விராட் கோலி !

போட்டி முடிந்ததும் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர் மொகமட் ரிஸ்வானை, கேப்டன் விராட் கோலி கட்டிப்பிடித்து பாராட்டியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Update: 2021-10-25 07:03 GMT

போட்டி முடிந்ததும் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர் மொகமட் ரிஸ்வானை, கேப்டன் விராட் கோலி கட்டிப்பிடித்து பாராட்டியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. துபாயில் நேற்று (அக்டோபர் 24) இரவு நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 5 முறையும், 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 7 முறையும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியை கண்டுள்ளது. இந்நிலையில்தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியால் பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே விளையாட்டு முடிந்ததும், மைதானத்தில் பாகிஸ்தான் வீரர் முகம்மது ரிஸ்வானை இந்திய கேப்டன் விராட் கோலி கட்டிப்பிடித்து வாழ்த்து கூறியுள்ளார். அப்போது பாபர் அசாமும் கோலியிடம் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News