''டி20 போட்டிகளில் அஸ்வினை சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை.. விராட் கோலி.!

டி 20 கிரிக்கெட் தொடரில் அஸ்வின் விளையாடுவதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

Update: 2021-03-12 13:22 GMT

டி 20 கிரிக்கெட் தொடரில் அஸ்வின் விளையாடுவதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டி இன்று இரவு அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. இந்த தொடரை கைப்பற்றிய சந்தோஷத்தில் களமிறங்குகிறது இந்திய அணி. இந்நிலையில், போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார் விராட்கோலி. அஸ்வின் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.




 


அப்போது அவர் பேசும்போது: டெஸ்ட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் அஸ்வின் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டுக்கு 50 ஓவர் மற்றும் டி20 போட்டிகளுக்கு திரும்ப வாய்ப்பிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். தற்போது சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் உண்மையிலேயே நன்றாக விளையாடி வருகிறார் என கூறினார். மேலும் ஒரு இடத்துக்கு ஒரே மாதிரியாக பந்துவீசும் இரண்டு பேரை சேர்க்க முடியாது.




 


வாஷிங்டன் சுந்தர் மோசமாக பந்து வீசினால் மட்டும் அஸ்வினை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அதுவரை அவர் திரும்புவதற்கு வாய்ப்பில்லை என கூறினார்.

Similar News