ஆஸ்திரேலியா மண்ணில் பிரித்திவ் ஷா ஆட்டத்தை காண ஆவலாக உள்ளேன் வீராட் கோலி.!

ஆஸ்திரேலியா மண்ணில் பிரித்திவ் ஷா ஆட்டத்தை காண ஆவலாக உள்ளேன் வீராட் கோலி.!

Update: 2020-12-17 09:11 GMT

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், அடுத்ததாக நடைபெற்ற டி.20 தொடரை 2-1 என்ற இந்திய அணியும் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று துவங்க உள்ளது.


முதல் டெஸ்ட் போட்டி அடிலெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி பகல் இரவு போட்டியாக நடைபெறுவதால் இதன் மீது கவனம் அதிகம் ஈர்க்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் தொடக்க வீரர் போட்டியில் பிரித்திவ் ஷா வென்று உள்ளார்.

இந்நிலையில் அவரை ஏன் அணியில் சேர்க்க வேண்டும் ? என்ற கேள்விகளை பலரும் எழுப்பி வரும் நிலையில் கேப்டன் கோலி தற்போது ப்ரித்வி ஷா குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஆஸ்திரேலிய மண்ணில் ப்ரித்வி ஷாவின் ஆட்டத்தை காண ஆவலாக உள்ளேன்.

அவரது ஆட்டம் எவ்வாறு அமையப் போகிறது என்பதும் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக அவர் விளையாட போவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் அதேபோன்று திறமையான வீரரான சுப்மன் கில்லும் வாய்ப்பு கிடைக்கும் போது தனது திறமையை நிரூபிக்க என்றுதான் நினைப்பார் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நாளைய போட்டியில் அவர் சொதப்பும் பட்சத்தில் இனிவரும் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்பதில் சந்தேகமில்லை.

Similar News