நான் ஓய்வு கேட்கவே இல்லை: விராட் கோலி பரபரப்பான தகவல்!
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் வருகின்ற டிசம்பர் 26ம் தேதி தொடங்க உள்ளது. இதனிடையே ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மாவை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் வருகின்ற டிசம்பர் 26ம் தேதி தொடங்க உள்ளது. இதனிடையே ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மாவை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியில், விராட் கோலி ஓய்வு கேட்டதை தொடர்ந்து அவர் அணியில் இடம்பெற மாட்டார் என்று அவரது ரசிகர்கள் மட்டும் இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். அதிலும் சிலர் அவர் கிரிக்கெட்டை விட்டே ஓய்வு பெறுவார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். நான் டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து மட்டுமே விலகுவதாக தலைமையிடம் பேசினேன். ஆனால் டெஸ்ட் அணி அறிவிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர்தான் தலைமை அணியின் தேர்வாளர் என்னை அழைத்து ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக கூறினார். இதனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மேலும், ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் இது தொடர்பாக என்னிடம் யாரும் பேசவே இல்லை. கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சிதான். அவர் மிகவும் திறமைசாலி. கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர் ஆவார். தற்போது இந்திய அணிக்காக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடவும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Maalaimalar
Image Courtesy:The New Indian Express